Home Blog Page 9

நெடுந்தீவு கடலில் மீட்கப்பட்ட பூச்சிகொல்லி மருந்து

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 35 போத்தல் பூச்சிகொல்லி மருந்து நேற்று வியாழக்கிழமை கடற்படையினரால் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;;

நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று மிதந்து வருவதை அவதானித்த கடற்படையினர் சோதனையிட்டபோது அதில் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கடத்தல்காரர்கள் இந்தியாவிலிருந்து குறித்த பூச்சிக்கொல்லி மருந்துகளை கடத்திய நிலையில் கடற்படையினரை கண்டதும் குறித்த பூச்சிக்கொல்லி மருந்து பொதியை கடலில் வீசிவிட்டு தப்பி இருக்கலாம் என்ற கோணத்தில் கடற்படையினர் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

அனுராதபுரத்தில் விபத்து – தாயும் மகளும் உயிரிழப்பு – தந்தையும் மகனும் படுகாயம்!

இன்று (02) அதிகாலை 5.20 மணியளவில் அனுராதபுரம், கவரக்குளம், வண்ணமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

தந்தையும் மகனும் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தெரியவருகையில்

தம்புள்ளையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்தவர்கள் தம்புள்ளை ரத்மல்கஹா எல பிரதேசத்தில் வசிக்கும் தாய் மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கவரக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒத்தி வைக்கப்பட்ட புலமை பரீட்சை திகதி

ஒகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருந்த 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகியனவற்றை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் கூறினார்.

அதேவேளை , நேற்றுடன் நிறைவடைந்த கல்விபொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குரிய செயன்முறை பரீட்சைகளை எதிர்வரும் ஜூலை மதம் 10 திகதிக்கு நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

சிஐடியிடம் சரணடைந்தார் மஹிந்த கஹந்தகம…!

இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம சரணடைந்துள்ளார்.

மே 09 அன்று கொழும்பில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களில் சந்தேக நபராக கஹந்தகம குறிப்பிடப்பட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மேலும் இருவருடன் இந்த வழக்கில் சந்தேகநபராக அவர் பெயரிடப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் சட்டமா அதிபர் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து அவர்கள் இந்த வழக்கில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மஹிந்த கஹந்தகம இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்துள்ளார்.

அதில் கஹந்தகம, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல்வாதிகள் மற்றும் விசுவாசிகள் அமைதியான போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம்

இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.இதன்படி, டொலரின் பெறுமதியில் சிறிதளவான மாற்றம் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை இன்றைய தினம் 365 ரூபா 58 சதமாக பதிவாகியுள்ளது.அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 355 ரூபா 61 சதமாக பதிவாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள பில்லியன் கடன் தொகை

குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள சர்வதேச ஊடகமொன்று, இந்த கடன் ஒரு விரிவான நிதி வசதியின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இம்மாதம் முதல் வாரத்தில் மற்றொரு சுற்று தொழில்நுட்ப விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கைக்கு வருமென நம்புவதாக தெரியவந்துள்ளது.

குடிகார தந்தையால் 4 வயது சிறுமி வைத்தியசாலையில்

நேற்று முன்தினம்இரவு யாழில் தந்தையால் கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த 4 வயது சிறுமி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் யாழ் கொடிகாமம், கெற்பெலி பகுதியை சேர்ந்த சிறுமியே பாதிக்கப்பட்டார். இரட்டை குழந்தைகளில் ஒருவரான சிறுமி வீட்டுக்கு வெளியில் சென்றுள்ளார்.

மதுபோதையில் இருந்த தந்தை, யாருக்கும் சொல்லாமல் ஏன் வீட்டுக்கு வெளியில் சென்றாய் என கேட்டு, இரும்புக் கம்பியினால் சிறுமியை தாக்கியுள்ளார். இதில் சிறுமியின் கை, காலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில், இரவே சிறுமி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று, மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தந்தையை கைது செய்யவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

16 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கையி தெரியவந்துள்ளது.வாட்ஸ்அப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது

வாட்ஸ்அப் பயனர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் நிறுவனம் 122 கணக்குகளை தடை செய்துள்ளோம். அதேபோல வாட்ஸ்அப்பில் தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டைத் தடுப்பதற்காக 16.66 லட்சம் கணக்குகளைத் தடை செய்துள்ளோம். நாங்கள் குற்றம் நடைபெறுவதை தடுப்பதில் கவனம் செலுத்துகிறோம், ஏனென்றால் தீங்கு ஏற்பட்ட பிறகு அதைக் கண்டறிவதை விட, தீங்கு விளைவிக்கும் செயலை முதலில் தடுப்பது மிகவும் சிறந்தது.

இவ்வாறு தடை குறித்து வாட்ஸ்அப் விளக்கம் அளித்துள்ளது.

பிரபல நடிகர் வெளியிட்ட பரத் பட போஸ்டர்

பாய்ஸ், செல்லமே, காதல், உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பதித்தவர் நடிகர் பரத். இவரின் யதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நடுவண் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2022-ல் தேர்வானது.

தற்போது எம்.சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “மிரள்”. இப்படத்தில் வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு பிரசாந்த் எஸ்.என். இசையமைக்கிறார். பாலா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கலைவாணன்.ஆர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஸ்லாஷர் த்ரில்லராக உருவாகியுள்ள “மிரள்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகிவுள்ளது. இதனை, நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிந்துள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

இதற்குமுன் ஆஷஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளியான ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் என பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

நாளை அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல்

நாளை (03)அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளது.

அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடன் இறுதி இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்று விளக்கமளிக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் காலை 10.00 மணிக்கு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இது தொடர்பில் விளக்கமளிக்க உள்ளார்.

Exit mobile version