செல்லப்பிராணிகளுடன் தொடர்பு கொள்ளும் வகையில் அவற்றின் ஒலிகளை புரிந்து கொள்ளும் திறன் கொண்ட ஒரு புதிய கழுத்துப்பட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சீனாவைச் சேர்ந்த Meng Xiaoyi என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கழுத்துப்பட்டை பெட்டிசாட் (PettiChat) என அழைக்கப்படுகிறது.
இந்த கழுத்துப்பட்டை அலிபாபா கிளவுடின் க்வென் ஏஐ (Qwen AI) மாதிரியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்ட 15 லட்சத்திற்கும் மேற்பட்ட நிஜ உலக செல்லப்பிராணிகளின் ஒலி மாதிரிகள் மற்றும் 3,200 மணிநேரக் குறிப்புரைக்கப்பட்ட செல்லப்பிராணிகளின் காணொளித் தரவுகளைக் கொண்டு இது பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் செல்லப்பிராணியின் கழுத்தில் மாட்டியிருக்கும் போது, அதன் ஒலிகள், உணர்ச்சிகள் மற்றும் நடத்தையை அதிகத் துல்லியத்துடன் அடையாளம் கண்டு, AI உதவியுடன் எழுத்துக்களாக மாற்றி இந்த AI தொடர்புடைய செல்போன் செயலிக்கு அனுப்பும்.
உதாரணமாக, உங்கள் பூனை மேலே பார்த்து மியாவ் என கத்தும் போது, அது “நான் விளையாட வேண்டும்” எனக்கூறுவதாக மொழி பெயர்த்து அனுப்பும். நாய் குரைக்கும் போது “அது எனக்கு பசிக்கிறது” என கூறுவதாக மொழிபெயர்த்து அனுப்பும். நீங்கள், “சும்மா இரு, அமைதியாக இரு,” என்பது போன்ற வார்த்தைகளை கூறும் போது, அந்தப் பட்டை, குரைப்பு அல்லது மியாவ் ஒலிகள் மூலம் அந்தச் செய்தியை செல்லப்பிராணிக்கு தெரிவிக்கும்.
இந்த கழுத்து பட்டையில் GPS கண்காணிப்பு வசதியும் உள்ளதால், உங்கள் செல்லப்பிராணி எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால், 1,000 க்கும் மேற்பட்ட “வாக்கிய மொழிபெயர்ப்புகளை” செய்ய முடியும். இந்த பட்டை 27.2 கிராம் எடை கொண்டது.
இந்த பட்டை மே 30



































