பிந்திய செய்திகள்

அரச நிறுவனங்கள் சமூக சக்தியை ஆதரிக்க நடவடிக்கை எடுக்கும்

இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு செயலமர்வில், தொழில்துறை அபிவிருத்திக்கு தொண்டாற்றும் அரசு நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டங்களை ஒன்றிணைத்து, சிறப்பாக செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டது. அன்றைய செயலமர்வில், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டங்களை இனங்கண்டு, அந்த தகவல்களை ஒரு தரவுக் கட்டமைப்பில் சேர்ப்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.

அரசு நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் தன்மையையும், அவற்றின் அளவுகோல்களையும் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொழில்துறை அபிவிருத்தியுடன் நேரடியாகத் தொடர்புள்ள திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் அளவுகோல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், இந்த வேலைத்திட்டங்களை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தும்போது, அரசு நிறுவனங்கள் மற்றும் ‘சமூக சக்தி’ தேசிய செயற்பாடு ஆகியவற்றின் தனித்தனியான அல்லது கூட்டு செயல்பாடுகளை உருவாக்குவதற்கும், அவற்றை அடையாளம் காண்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டது. இந்த வேலைத்திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, அவை இரட்டிப்பாவதைத் தடுப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் வளவாளர்களாக இருந்தனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts