இலங்கையும் மேந்தியத்தீவுகளும் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (03) ஆரம்பமானது. இதன்படி, இலங்கை நேரப்படி இன்று காலை 08.00 மணிக்கு ஜமைக்காவில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் முதல் போட்டி ஆரம்பமாகிறது.
இலங்கை அணியை விக்கெட் காப்பாளர் குசல் மெண்டீஸ் தலைமை தாங்குவார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் ஷெய் ஹோப் என்பவர். இந்த அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்களை பார்க்கும் பொழுது இலங்கையில் குசல் மெண்டீஸ், வனிந்து ஹசரங்கா, கமிந்து மெண்டிஸ் மற்றும் பத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஷிம்ரன் ஹெட்மயர், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், ஷெர்ஃபேன் ரூதர்போர்டு மற்றும் ஜெய்டன் சீல்ஸ் போன்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
2026 ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஈஷான் மலிங்காவும், சுழற்பந்து வீச்சாளர் மகீஷ் தீக்ஷனவும் இலங்கை அணியில் இடம் பெற்றுள்ளனர்.





































