இன்று (25/1/2021) தேய்பிறை அஷ்டமி! கடன் தொல்லை நீங்க பைரவருக்கு ஏற்ற வேண்டிய இந்த தீபம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

தேய்பிறை அஷ்டமியில் பொதுவாக பைரவரை வழிபடுவது சிறப்பாகும். ஆன்மீகத்தில் பைரவருக்கு அஷ்டமி திதி மிகவும் உகந்த திதியாக கருதப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷமானது. சிவனின் அம்சமாக கருதப்படும் பைரவர் காலத்தை கணக்கிட கூடியவர்.

அதனால் அவருக்கு காலபைரவர் என்கிற பெயருண்டு. காலத்தால் செய்ய முடியாத எந்த ஒரு விஷயத்தையும் அவர் அருள் இருந்தால் நாம் அதனை வென்று விட முடியும் என்கிற நம்பிக்கை நிலவி வருகிறது. அந்த வகையில் நாளை செவ்வாய்க் கிழமை தேய்பிறை அஷ்டமியில் கடன்கள் நீங்க பைரவருக்கு என்ன விளக்கு போட வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தை மாதத்தில் வரக்கூடிய இந்த செவ்வாய் தேய்பிறை அஷ்டமியில் காலபைரவர் கோவிலில் விசேஷமான பூஜைகள் நடத்தப்படும். இந்நாளின் ராகு கால வேளையில் சொர்ண ஆகர்ஷன பைரவரை வழிபடுவதன் மூலமாக வராத கடன்கள் உங்களுக்கு திரும்பி வந்துவிடும், பிரிந்த உறவினர்கள் மீண்டும் வந்து சேர்வதற்கும் இந்த வழிபாடு செய்யலாம். மேலும் உயர் பதவி பெறவும் ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வழிபடுவது உத்தமம்.

பால், இளநீர் ஆகிய ஏதாவது ஒரு அபிஷேக பொருளை பைரவருக்கு வாங்கிக் கொடுத்து இது போல் 8 தேய்பிறை அஷ்டமியில் நீங்கள் வழிபட்டு வந்தால் சகல, சவுபாக்கியங்களும் உண்டாகும். செவ்வாய்க் கிழமையில் வரக்கூடிய ராகு காலம் மதியம் மூன்று மணியிலிருந்து நான்கரை மணி காலம் வரை நீடித்து நிற்கிறது. இந்த ராகு காலத்தில் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரை வழிபட்டால் ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பண கஷ்டம் என்பதே ஏற்படாது. இப்படி ஒவ்வொரு மாதமும் அவரை வழிபட எத்தகைய கடன்களும் நீங்கி செல்வ வளம் பெருக துவங்கும்.

கடன் மேல் கடன் வாங்கி அவதிப்படுபவர்கள் நாளை குளிகை காலம் ஆகிய மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரையிலான காலகட்டத்தில் உங்கள் கடன் தொகையில் இருந்து ஒரு சிறு தொகையை கொடுத்து பாருங்கள், நிச்சயம் முழு தொகையையும் விரைவாகவே அடைத்து விடுவீர்கள். மந்திரம், மாந்திரீகம், பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு நாளைய தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வழிபடுவதன் மூலம் இந்த பிரச்சனைகள் எல்லாம் தவிடுபொடியாகும்.

கால பைரவரை வணங்குபவர்களுக்கு எண்ணிய காரியத்தில் வெற்றி உண்டாகும் மேலும் துர்தேவதைகள் உங்களை அணுகாது. உங்களை எதிர்த்து நின்ற பகைவர்கள் சரண் அடைந்து விடுவார்கள். ஈசானிய மூலையில் வடக்கிழக்கு திசையில் நீல திருமேனியாக அருள் பாலிக்கும் இந்த ஸ்ரீ கால பைரவர் சன்னிதிக்கு அதிகாலையிலேயே எழுந்து குளித்து நீராடி சுத்தமான ஆடை உடுத்திச் சென்று தேய்பிறை அஷ்டமியில் ஒரு வேளை மட்டும் உணவருந்தி விட்டு விரதமிருந்து பஞ்ச தீப எண்ணெய் ஏற்றுவது எத்தனை கடன்கள் இருந்தாலும் விரைவில் அடைப்பதற்கான பரிகாரமாக இருந்து வருகிறது.

பைரவருக்கு வடை மாலை சாற்றி, தயிர் சாதம் அல்லது சர்க்கரை பொங்கல் நைவேத்யம் படைத்து பூஜை முடிந்ததும் அதனை பக்தர்களுக்கு அல்லது ஏழை எளியவர்களுக்கு வழங்கினால் நினைத்தது நடக்கும். நல்லெண்ணெய் ஊற்றி மிளகு தீபம் ஏற்றுவதும் ஒரு பரிகாரம் ஆகும். இந்த பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய், நல்லெண்ணெய் ஆகிய இந்த ஐந்து எண்ணெய்களும் ஐந்து அகல் விளக்குகளில் தனித்தனியாக ஊற்றி தீபமேற்றுவது ஆகும்.

Exit mobile version