இலங்கையின் மாத்தளை, மடவல, உல்பத்தை பிரதேசத்தில் தாயை இழந்து பரிதவிக்கும் இரட்டை குழந்தைகள்
இலங்கையில் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் இரட்டை குழந்தைகளை பெற்ற தாய் ஒருவர் 14 நாட்களில் உயிரிழந்துள்ள சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளை பிரசவித்த தாயார் 14 நாட்கள் உடல் நலத்துடன் இருந்த நிலையில் திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் 32 வயதான சுமித் குமார கருணாரத்ன என்ற தந்தையே குழந்தைகளை பராமரித்து வருகிறார்.
கூலி வேலை செய்துவரும் சுமித்திற்கும் நிரோஷாவுக்கும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். குழந்தைகள் சிஸேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த நிலையில் 4 நாட்கள் மருத்துவமனை சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
அன்று இரவு திடீரென ஏற்பட்ட உடல் நல பாதிப்பு காரணமாக தாய் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோதும், அங்கு அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி உயிரிழந்ததனை தன்னால் இன்னமும் நம்ப முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குழந்தைகளை வளர்ப்பதற்கு அவருக்கு போதுமான வருமானம் இன்மையால் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது பொதுமக்கள் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வரும் நிலையில் குழந்தைகளுக்கு பால் பக்கட்கள் கொள்வனவு செய்வதற்கு கூட வசதி இல்லாத அவருக்கு அயலவர்கள் உதவி வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த தந்தையில் அவலநிலை குறித்து சமூக வலைத்தளங்களில் உதவி கோரி பலரும் இந்த தகவல்களை பரிமாறி வருகின்றனர்.