இன்று (30) ஞாயிறு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறை..! என திவயின தலையங்கம் தீட்டியுள்ளது.
அடுத்த மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு வரைவில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு பதிலாக 1972 ஆம் ஆண்டு நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறைமை உருவாக்கப்பட உள்ளதாக ‘திவயின ’ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பில் மாகாண சபைகள் உள்வாங்கப்படாது என்பதால் , அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழு புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகளை உள்ளடக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.