2022 ஜனவரி மாதத்தில் மாத்திரம் நாட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 75,000 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று(29) ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 76,538 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
அதில் ரஷ்யாவிலிருந்து 12,368 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இந்தியாவில் இருந்து 11,028 பேரும், உக்ரைனில் இருந்து 7,427 பேரும் வந்துள்ளதுடன், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, மாலைதீவு மற்றும் கஸகஸ்தான்ஆகிய நாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1,682 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டு 11 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மாத்திரம் நாட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 75,000 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று(29) ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 76,538 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
அதில் ரஷ்யாவிலிருந்து 12,368 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இந்தியாவில் இருந்து 11,028 பேரும், உக்ரைனில் இருந்து 7,427 பேரும் வந்துள்ளதுடன், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, மாலைதீவு மற்றும் கஸகஸ்தான்ஆகிய நாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1,682 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டு 11 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.