Home இலங்கை விக்டோரியா நீர்த்தேக்கத்தில் கடும் வெப்பத்தினால் ஆவியான ஜிகாவாட் மின்சாரம்!

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் கடும் வெப்பத்தினால் ஆவியான ஜிகாவாட் மின்சாரம்!

0

இலங்கையில் சுமார் 26 கிலோமீற்றர் பரப்பளவில் அமைந்துள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக நாளொன்றுக்கு இரண்டு மில்லியன் கனமீற்றர் நீர் ஆவியாகுவதாக பொறியியலாளர் வசந்த எஹலபிட்டிய கூறியுள்ளார்.

இம்மாதத்தில் மட்டும் நீர்த்தேக்கத்திலிருந்து சுமார் 180 மில்லியன் கனமீட்டர் நீர் வெளியிடப்பட்டு ,தேசிய மின்கட்டமைப்பிற்கு சுமார் 85 ஜிகாவாட் மணிநேர மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினசரி 2.5 முதல் 3.00 கிகாவாட் மணிநேரம் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 438 மீற்றர் என்பதுடன் 28 ஆம் திகதி வரை நீர்மட்டம் 423 மீற்றராகக் குறைந்துள்ளதாகவும் பொறியியலாளர் தெரிவித்தார்.

மேலும் நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர் கொள்ளளவு 723 மில்லியன் கன மீட்டராகவும், இம்மாதம் 28ஆம் திகதி நிலவரப்படி 218.7 ஆகவும் இருந்தது.

எனவே இதுவரை ஒன்றரை ஜிகாவொட் மின்சாரத்தைத் தயாரிக்கக்கூடிய மின்சாரம் ஆவியாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version