5ஆண்டுகளுக்கு பின் மிகப்பெரிய ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா

வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று
2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெரிய ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. இந்த மாதத்தில் இது 7வது சோதனையாகும்.

இந்த சோதனைக்கு ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

வடகொரியா அணு ஆயுதங்களை சோதனை செய்வதை தடுக்க ஐக்கிய நாடுகள் சபை கடுமையான தடைகளை விதித்துள்ளது. ஆனாலும் அந்நாடு தொடர்ந்து தடைகளை மீறி வருகிறது.

நாட்டின் பாதுகாப்பில் உறுதியாக இருப்பதாக அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

Quantcast
Exit mobile version