Home இலங்கை மசகு எண்ணெய்யை விநியோகிக்க அமைச்சரவை அனுமதி

மசகு எண்ணெய்யை விநியோகிக்க அமைச்சரவை அனுமதி

0
மசகு எண்ணெய்யை விநியோகிக்க அமைச்சரவை அனுமதி

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தேவையான மசகு எண்ணெய்யை விநியோகிப்பதற்காக சைப்பிரஸ் நாட்டின் Terra Navis Group இனால் கோரப்பட்ட முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதற்க்கு மசகு எண்ணெய்யை விநியோகிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

180 நாட்கள் கடன் அடிப்படையில் மசகு எண்ணெய்யை விநியோகிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவை அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிரந்தர பெறுகைக் குழுவின் மதிப்பீட்டுக்கு உட்படுத்தி அதன் ஆரம்ப கட்டமாக 450,000 பீப்பாய்கள் கொண்ட கப்பல் தொகையை விநியோகிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அப்பரிந்துரைகளுக்கமைய குறித்த மசகு எண்ணெய்யை விநியோகிப்பதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here