கிரிக்கட் தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு இலங்கை அணி பயணம்

இன்று காலை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளது.

குறித்த போட்டி தொடர் எதிர்வரும் 11ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டித் தொடருக்காக இலங்கை அணியில் பல புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தனுஷ்க குணதிலக மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரும் இந்த சுற்றுப்பயணத்திற்கான அணியில் இடம்பிடித்துள்ளனர்.

Quantcast
Exit mobile version