பிந்திய செய்திகள்

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயதில் நாட்டி வைக்கப்பட் ட அடிக்கல்!

இன்றையதினம்(04)ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய நுழைவாயில் உள்ளக வீதி வேலைத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

அரசாங்கத்தின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூலம் “ஒரு இலட்சம் பணிகள்” அபிவிருத்தி வேலைத்திட்டம் நேற்றையதினம் நாடு பூராகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் நுழைவாயில் 320 மீட்டர் உள்ளக வீதி அமைப்பு வேலைக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான காதர் மஸ்தான், மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட உள்ளக கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஆகியோர் வீதி வேலைக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts