Home விளையாட்டு ரோகித் சர்மாவுக்கு கிடைத்த பாரிய வாய்ப்பு!!

ரோகித் சர்மாவுக்கு கிடைத்த பாரிய வாய்ப்பு!!

0

வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் ஆர்வத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் டோனியின் சாதனையை ரோகித் சர்மா முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

ஒருநாள் போட்டியில் சொந்த மண்ணில் அதிக சிக்சர் எடுத்த இந்திய வீரர்களில் டோனியும், ரோகித் சர்மாவும் முதல் இடத்தில் உள்ளனர். இந்திய மண்ணில் டோனி 113 இன்னிங்சில் 116 சிக்சர்களும், ரோகித் சர்மா 67 இன்னிங்சில் 116 சிக்சர்களும் அடித்துள்ளனர்.

இன்றைய ஆட்டத்தில் ஒரு சிக்சர் அடித்தால் டோனியின் சாதனையை முறியடித்து ரோகித் சர்மா முதல் இடத்தை பிடிப்பார். ஒட்டுமொத்த ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 245 சிக்சர் அடித்து இந்திய வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். டோனி 229 சிக்சருடன் 2-வது இடத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version