காதலர் தினத்திற்கு புதிய அர்த்தம் சேர்க்கும் வேளையில், பெப்ரவரி 14 ஆம் திகதி ‘காதலர் தினத்திற்கு ‘காதலுக்கு ஒரு மரம்’ என்ற எண்ணக்கருவில் மரம் நடும் திட்டத்தை அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு முடிவு செய்துள்ளது.
அதன்படி மரம் நடும் திட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சு, பாதுக்க கிறீன் யுவர்சிட்டி, இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகம் மற்றும் இலங்கை அபிவிருத்தி அறக்கட்டளை ஆகியன இணைந்து காலை 9.00 மணிக்கு நடத்துகின்றன.
கடந்த ஆண்டும் காதலர் தினத்திற்காக இதேபோன்ற மரம் நடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அன்றைய தினம் மட்டும் 50,000 மரக்கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.