இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக பெண் நியமனம்

அமெரிக்க அரசதலைவர் ஜோ பைடன் நிர்வாகத்தினால் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சுங்நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் வெண்டி ஆர். செர்மன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கைக்கான தூதுவராக ஜூலி சுங்கிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் பெருமையடைவதாக வெண்டி ஆர். ஷெர்மன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தூதுவர் சுங்கின் தலைமைத்துவம் அமெரிக்க மக்களை பிரதி நிதித்துவப் படுத்துவதற்கும், அமெரிக்க – இலங்கை கூட்டுறவை முன்னேற்றுவதற்கும் அவரை சரியான தேர்வாக ஆக்கியுள்ளது. எங்கள் பணியை ஒன்றாகத் தொடரக் காத்திருக்கிறேன் என பிரதி இராஜாங்க செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மேற்கு அரைக்கோள விவகாரங்களுக்கான முன்னாள் உதவி இராஜாங்க செயலாளர் ஜூலி சுங் செயற்பட்டிருந்தார்.

அத்தோடு, கம்போடியா அமெரிக்க தூதரகத்தில் துணைத் தூதராகவும், தாய்லாந்தின் அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜூலி சுங், கலிபோர்னியா-சான் டியாகோ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை கலைப் பட்டத்தையும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பொது விவகாரப் பள்ளியில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

சியோலில் பிறந்த ஜூலி சுங் கொரிய, ஜப்பானிய, ஸ்பானிஷ் மற்றும் கெமர் மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version