சீனா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தவற்கான மாற்று முறைகளை அடையாளம் காணுவதற்காக மூன்று தனித்தனி அமைச்சரவை உபக்குழுக்கள் நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, மூ3 நாடுகளுடன் கலந்துரையாட அமைச்சவை உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
சீனாவுடன் கலந்துரையாடுவதற்காக வெளிவிவகார அமைச்சரின் தலைமையில் வர்த்தக அமைச்சர், கைத்தொழில் அமைச்சர் மற்றும் பெருந்தோட்ட அமைச்சரின் பங்கேற்பில் உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானுடன் கலந்துரையாடுவதற்காக வெளி விவகார அமைச்சரின் தலைமையின் கீழ் சுகாதார அமைச்சர், வெகுஜன ஊடக அமைச்சர் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர்கள் அடங்கிய உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய கிழக்கு நாடுகளுடன் கலந்துரையாடுவதற்காக வௌிவிவகார அமைச்சரின் தலைமையின் கீழ் இளைஞர் மற்றும் விளையாட்டு மற்றும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் உள்ளடங்களாக உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.