Home தொழினுட்பம் ட்விட்டர் பயனர்களை பாதுகாக்கும் புதிய அம்சத்தினை வெளியிட்டது!

ட்விட்டர் பயனர்களை பாதுகாக்கும் புதிய அம்சத்தினை வெளியிட்டது!

0

முன்னணி சமூக வலைதள நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் “சேப்டி மோட்” அம்சத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறிய மக்கள் தொகையினருக்கு அறிமுகப்படுத்தி சோதனையை தொடங்கியது.

இந்த சேப்டி மோட் அம்சத்தை பயன்படுத்தும் பயனர்களின் பதிவுகளில் யாரேனும் ஆபாசமாகவோ, வன்முறையை தூண்டும் விதமாகவோ கமெண்ட் செய்தால் அவர்களுடைய கணக்கு தானாகவே 7 நாட்களுக்கு பிளாக் செய்யப்படும்.

இந்த அம்சம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த அம்சத்தை அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 50 சதவீத ட்விட்டர் கணக்குகளுக்கு விரிவுப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதன்பின் இந்த அம்சம் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version