பிந்திய செய்திகள்

தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ள பாடசாலைகள்

இலங்கையில் மேலும் 125 பாடசாலைகளை எதிர்வரும் 02 மாதங்களில் தேசிய பாடசாலை தரத்திற்கு உயர்த்தவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எந்தவொரு தேசிய பாடசாலையும் இல்லாத 125 பிரதேச செயலக பிரிவுகளில், தலா ஒரு பாடசாலை வீதம் தேசிய பாடசாலை தரத்திற்கு உயர்த்தப்படவுள்ளதாக அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் கித்சிறி லியனகம குறிப்பிட்டார்.

இதுவரை 09 மாகாணங்களிலும் 09 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் கித்சிறி லியனகம கூறினார்.

வசதிகளுடன் கூடிய கற்றலுக்கான சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமென தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts