பிந்திய செய்திகள்

2-வது இன்னிங்சிலும் விக்கெட்டுகளை இழந்து தென்ஆப்பிரிக்கா

நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் மேட் ஹென்ரி 7 விக்கெட் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா 95 ரன்னில் சுருண்டது.

பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. ஹென்ரி நிக்கோல்ஸ் 37 ரன்களுடனும், நீல் வாக்னர் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஹென்ரி நிக்கோல்ஸ்- நீல் வாக்னர் ஜோடி சிறப்பாக விளையாடியது. நீல் வாக்னர் 49 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

387 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் அந்த அணி விக்கெட்டை மளமளவென இழந்தது. டீன் எல்கர், எர்வீ ஆகிய தொடக்க வீரர்கள் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினர். அடுத்து வந்த மார்கிராம் 2 ரன்னில் நடையை கட்டினார்.

தென்ஆப்பிரிக்கா 9 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருக்கும்போது 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. டஸ்சன் 9 ரன்னுடனும், பவுமா 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது தென்ஆப்பிரிக்கா 353 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளை காலை ஆட்டம் தொடங்கியதும் விரைவாக விக்கெட்டுகளை இழந்தால் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts