பிந்திய செய்திகள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு 10க்கு மேற்பட்ட புதிய பயிற்சியாளர்கள் நியமனம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இலங்கை கிரிக்கெட் அணிக்காக 14 புதிய பயிற்சியாளர்களை நியமித்துள்ளது.

அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக ​நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் Anton Roux நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இலங்கை A அணி, வளர்ந்து வரும் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை A அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பயிற்றுவிப்பாளர்கள் பின்வருமாறு,

திலின கண்டம்பி – உதவி பயிற்சியாளர்
மலிந்த வர்ணபுர – துடுப்பாட்ட பயிற்சியாளர்
சஜீவ வீரகோன் – பந்துவீச்சு பயிற்சியாளர்
உபுல் சந்தன – பந்துவீச்சு பயிற்சியாளர்

இலங்கை வளர்ந்த வரும் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ருவான் கல்பகே நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பயிற்றுவிப்பாளர்கள் பின்வருமாறு,

ருவின் பீரிஸ் – உதவி பயிற்சியாளர்
தர்ஷன கமகே – பந்துவீச்சு பயிற்சியாளர்
தம்மிக்க சுதர்சன – துடுப்பாட்ட பயிற்சியாளர்

19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜெஹான் முபாரக் நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பயிற்றுவிப்பாளர்கள் பின்வருமாறு,

சம்பத் பெரேரா – உதவி பயிற்சியாளர் / துடுப்பாட்ட பயிற்சியாளர்
சமில கமகே – பந்துவீச்சு பயிற்சியாளர்
கயான் விஜேகோன் – பந்துவீச்சு பயிற்சியாளர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts