பிந்திய செய்திகள்

புதிய சாதனை படைக்கும் தவான்!

சென்னை அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் தொடக்க வீரர் ஷிகர் தவான் புதிய மைல் கல்லை தொடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் ஐ.பி.எல். போட்டியில் 198 இன்னிங்சில் 5998 ரன் எடுத்துள்ளார். இதில் 2 சதமும், 45 அரை சதமும் அடங்கும். இன்னும் 2 ரன் எடுத்தால் தவான் 6 ஆயிரம் ரன்னை தொடுவார்.

இந்த ரன்னை எடுக்கும் 2-வது வீரர் ஆவார். விராட் கோலி 207 இன்னிங்சில் 6402 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

ரோகித்சர்மா (5764), டேவிட் வார்னர் (5668), ரெய்னா (5528) ஆகியோர் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts