பிந்திய செய்திகள்

மும்பை அணியை வீழ்த்திய ராஜஸ்தான்

நேற்று(2) இரவு மும்பை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஜாஸ் பட்லர் 100 ரன்கள் விளாசினார். மும்பை அணி தரப்பில் பும்ரா, மில்ஸ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களே எடுத்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 61 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் 54 ரன்கள் சேர்த்தார். ராஜஸ்தான் தரப்பில் நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாகல் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts