பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று பகல்- இரவாக நடந்தது முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன் குவித்தது.
பென் மெக்டர் மட் 104 ரன்னும், டிரெவிஸ் ஹெட் 89 ரன்னும், லபுஷேன் 59 ரன்னும், ஸ்டோனிஸ் 49 ரன்னும் எடுத்தனர். ஷகீன்ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், முகமது வாசிம் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
349 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடியது.அந்த அணி ஒரு ஒவர் எஞ்சிய நிலையில் 349 ரன் இலக்கை எடுத்தது. பாகிஸ்தான் 49 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 349 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கேப்டன் பாபர் ஆசம், தொடக்க வீரர் இமாம்- உல்-ஹக் ஆகியோர் சதம் அடித்தனர். பாபர் ஆசம் 83 பந்தில் 114 ரன்னும் (11 பவுண்டரி, 1 சிக்சர்), இமாம்-உல்-ஹக் 97 பந்தில் 106 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்) பகர் ஜமான் 67 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
பாபர் ஆசம் 15-வது சதத்தை பதிவு செய்தார். 83 இன்னிங்சில் இதை எடுத்து சாதனை புரிந்தார். இதற்கு முன்பு ஹாசிம் அம்லா 86 இன்னிங்சில் 15 சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.மேலும் பாகிஸ்தான் அணி ரன் இலக்கை எட்டியதிலும் புதிய சாதனை படைத்தது