பிந்திய செய்திகள்

தாயின்றித் தரணியில்லை -இன்று உலக அன்னையர் தினம்!

உலகில் எதற்கும் ஈடு இணையற்றது ஒன்று இருக்கிறதென்றால், அது அன்னை தான். அனைவருக்கும், அன்னைதான் முதல் தெய்வம். நம்மை உலகுக்கு அடையாளம் காட்டியவர் அன்னை மட்டுமே. வயதான காலத்திலும் அவர்களை அன்போடு நடத்த வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் மே 2வது ஞாயிறு (மே 12), உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

எப்படி வந்தது. :பண்டைய கிரீசில், “ரியா’ என்ற கடவுளைத் தாயாகக் கருதி வழிபாடு நடத்தப்பட்டது. ரோமிலும் “சிபெல்லா’ என்ற பெண் கடவுளை அன்னையாக தொழுதனர். இன்றைய அன்னையர் தினம் நேரடியாகத் தாய்மார்களை குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. நவீன அன்னையர் தினம் முதன் முதலில் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவின், கிராம்ப்டன் நகரில் 1908ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

அமெரிக்காவை பின்பற்றி இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகள், மே 2வது ஞாயிறு அன்று இத்தினத்தை கொண்டாடுகின்றன.சிறந்த சமுதாயத்தை உருவாக்க, அன்னையரின் பங்களிப்பு முக்கியம். “எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்ற பாடல் வரிக்கு ஏற்ப, சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான்.

இன்று முடிந்தால் நேரிலோ அல்லது “மொபைல்’ மூலமாகவோ அன்னையருக்கு வாழ்த்துக்கூறி, ஆசிர்வாதத்தை பெற மறவாதீர்.

தாயின் கருவறைக்குள் 280 நாட்கள் வளரும் சிசுவின் உயிருக்கு தாயின் ரத்தத்தில் உள்ள சத்துக்கள் தான் தொப்புள் கொடியின் மூலம் கிடைக்கிறது. சிசுவின் நீண்ட பயணத்திற்கு தாயின் ஊட்டச்சத்துமிக்க உணவு மிக அவசியம். தாயின் எடை 25 – 35 ஐ.பி., (11.5 – 16 கிலோ) 9 மாதத்திற்குள் அதிகரிக்க வேண்டும். தாயின் எடை குறைவாக இருந்தால் குழந்தையின் எடையும் குறையும்.

அன்னையர் தினம் [u.k] ~ Theebam.com

தாயின் எடை அதிகமானால், குழந்தையும் பெரிதாகி, சிசேரியன் செய்ய வாய்ப்பு அதிகம்.அதனால் சமச்சீரான சத்தான உணவை கர்ப்பிணிகள் எடுக்க வேண்டும். புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அதிகளவில் தாய்க்கும் சேய்க்கும் தேவைப்படுகிறது. முட்டை, பால், இறைச்சி உணவு, பருப்பு வகைகளில் புரதச்சத்து கிடைக்கிறது. இரும்புச் சத்து, கால்சியம் ஆகியவை பீட்ரூட், கீரை, அசைவ உணவுகள், பால் இவற்றில் கிடைக்கிறது.

நாம் உண்ணும் உணவில் சரியான அளவில் கிடைக்காது என்பதால் இரும்புச்சத்து, கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.இவை மட்டுமின்றி பாஸ்பரஸ், அயோடின், மேக்னிசியம், காப்பர், சோடியம், பொட்டாசியம் புளூரைடு முதலிய தாது பொருட்களும் தேவைப்படுகிறது. டாக்டரின் அறிவுரைப்படி தேவையான மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக, கர்ப்பிணிகள் தாங்கள் விரும்புவதை உண்ண அறிவுறுத்தப்படுகிறது. வசதியற்ற பெண்கள் உணவின் அளவு போதுமானதாக உள்ளதா, கர்ப்பிணியின் எடை சரியாக அதிகரித்துள்ளதா என அறிந்து கொள்ள வேண்டும். இரும்புச்சத்து, கால்சியம் மாத்திரைகள் சரியான முறையில் வழங்க வேண்டும். இதைவிட ஒவ்வொரு பெண்ணும் தாய்மையை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும்.

ta]அன்னையர் தின வாழ்த்துக்கள் 2019[:en]அன்னையர் தின வாழ்த்துக்கள் 2014[:] | நீர்வேலி

ஊனாகி, உடலாகி, உயிராகி.. உயிர் தந்த அம்மா !உடல் தந்து… உதிரம் பெருக்கி… ஆணோ, பெண்ணோ உருவறியாமல்… உவகை பொங்க பெற்றெடுக்கும் அம்மாவை, நினைக்கும் போதே மனம் கசியும், விழியோரம் கண்ணீர் பெருகும். வயிற்றுக்குள் இருக்கும் போது தொப்புள் கொடி வழி உணவூட்டி, பிறந்தபின் பாலூட்டி, வளர்ந்தபின்னும் சீராட்டி… பிள்ளைக்காகவே வாழும் மனித தெய்வம், அன்னையன்றி வேறு யார்?

தனக்கென்று எதுவுமே வைத்துக் கொள்ளாத துறவியின் மனப்பக்குவம்… தன் வயிறு காய்ந்தாலும் பிள்ளை வயிற்றை நிறைக்கத் துடிக்கும் கருணை… எந்நேரமும் பிள்ளைகளைப் பற்றியே சிந்தனை… மனிதப் பிறவிக்கு மட்டுமல்ல… உலக உயிர்கள் அனைத்திற்கும் அன்னையே பிரதானம். இன்று அன்னையர் தினம்… உள்ளம் கசிந்துருகி, தாயின் உன்னதத்தை எடுத்துக் கூறும் இவர்கள்… நமது உள்ளத்தின் பிரதிகள் தான்.

அன்னையர் தின உறுதிமொழி:மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தாயை முதலிடத்தில் வைத்தவர்கள் நம் முன்னோர்கள். இயந்திர உலகில், பேட்டரி போடாத இயந்திர மனிதர்களாய் தன் தேவைகளை தேடி, மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பல பெற்றோர், முதியோர் இல்லத்தில் தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம், “ஏன் முதியோர் இல்லத்தில் வசிக்கிறீர்கள்’ என்று கேட்டபோது.. “எங்கள் பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை; அதனால் முதியோர் இல்லத்திற்கு வந்து விட்டோம்’ என்கிறார்கள்.

தங்கள் பிள்ளைகள், சரியாக கவனிக்க வில்லையென்றாலும், பிள்ளைகளை விட்டுக்கொடுக்காமல் பேசுகின்றனர். ஒரு தாய், பிள்ளைகளிடம் எதிர்பார்பதெல்லாம் அன்பும், அரவணைப்பும் தான். ஒவ்வொரு பிள்ளையும் தன் தாயை புரிந்து, முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமல், அன்புகாட்டினால் ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம் தான். உதிரம் கொடுத்து, உயிர் கொடுத்த அன்னையை, முதியோர் இல்லங்களுக்கு அனுப்பாத பிள்ளைகளாக இருப்போம். வருங்காலத்தில் முதியோர் இல்லங்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட உறுதியேற்போம்.

தாய்மையைப் போற்றுவோம் | தினகரன் வாரமஞ்சரி
 • அன்னையே…
  வாய்மை ஒன்றினையே வாழ்வாகக் கொண்டு
  தாய்மை என்பதன் இலக்கணமாய் நின்று
  சேய்மை அண்மை இரண்டிலும் நிறைந்து
  தூய்மை மனத்துடன் எந்தனை காத்து
  மண்ணுலகில் பிறவிதந்து எனைஈன்ற
  விண்ணின் சுடராம் ஆதவனை நிகர்க்கும் அற்புதமே!
  கண்ணே என்றென தழுவிடும் அன்னையே!
 • உந்தன் அன்பினை
  ஓங்கி உயர்ந்த மலையென்பேனா!
  தாங்கி நிற்றிடும் பூமி என்பேனா!
  பொங்கி ஆற்றிடும் கடல் என்பேனா!
  எந்த சொல் சொன்னாலும் அன்னை என்ற சொல்லுக்கு எச்சொல்
  நிகராகும் அன்னையே இருகரம் கூப்பி தொழுகிறேன் நின்னையே!
  வாழும் நாளெல்லாம் வாழ்வாங்கு வாழ்க!
Mothers Day Quotes: Happy Mothers Day: அன்னையர் தின வாழ்த்துக்கவிதைகள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள்... - mothers day 2020 wishes messages sms whatsapp facebook status images in tamil | Samayam Tamil

“இறைவன், தான் எல்லா இடத்திலும் இருக்க முடியாது, என்பதற்காக, தாயை படைத்தான்,’ என்பது, சான்றோர் மொழி. உலகில் புனிதமானது ஒரு தாயின் அன்பு அல்லவா? தன்னலத்திற்கும் மேல் ஒரு தாய் பேணுவது, தன் சேயின் நலத்தை அல்லவா? உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவான உணர்வு, தாயின் அன்பாயினும், மனுக்குலத்தின் தாய் தன் குழந்தையை பேணுவது, தன் உயிரையும் தியாகம் பண்ணத் தயங்காமல் பாதுகாப்பது என்று தாய்மையின் வெளிப்படுத்துதல் பூரணமாய் விளங்குகிறது.சரித்திரத்தில் பெருந்தலைவர்களின் வாழ்க்கையைக் காணும்போது, தாயின் வழிநடத்துதல் அவர்களை உயர்த்தியதைக் காண்கிறோம்.

சத்ரபதி சிவாஜி முதல் மகாத்மாகாந்தி வரை அன்னையின் அறிவுரையைப் பின்பற்றி நடந்து வெற்றி வாழ்க்கை வாழவில்லையா?காந்திஜி தாயின் ஆணைபெற்று, மது, மாது, புலால் ஒதுக்கி, தூய மனிதனாய் நம் மண்ணுக்கு வந்தார். தேச விடுதலைக்குப் போராடி வெற்றி பெற்ற அவருக்கு அந்த மனஉறுதி, சகிப்புத்தன்மை, போராடும் சக்தியும், தாய் கற்றுத் தந்த பாலபாடமே.

மனிதனாய் பிறந்தவனுக்கு தாயின் மடியே முதல் பள்ளி. ஆகவேதான் ஒரு பெண்ணை படிக்க வைத்தால், ஒரு குடும்பத்திற்கு கல்வி புகட்டுவதற்கு சமம் என, காந்தஜி கூறினார்.ஒரு பெண்ணின் வாழ்க்கை பூரணப்படுவது, அவள் தாயான பின்னரே. திருமணமாகி இரு ஆண்டுகளுக்குள் தாய்மை அடையாத பெண்களுக்கு தக்க சிகிச்சை செய்து கருத்தருவிக்க, செய்வதே எங்கள் லட்சியம். சோதனைக் குழாய் சிசுமுறையில் இந்த லட்சியம் நிறைவேற பாடுபடுகிறோம். இறை அருளால் நல்ல வெற்றியும் காண்கிறோம்.

அன்னை என்றோர் ஆலயம்- Dinamani

செய்வதை விட, தாய்க்கு பணிவிடை செய்வதே மேல்”. அலைமோதும் திருவிழா கூட்டம், அசைந்து ஆடி வருகிறது தேர். கூட்டத்தின் இடையில் ஒரு தாய், இடுப்பில் ஒரு குழந்தையும், கையில் ஒரு குழந்தையுமாக கடவுளை தரிசித்து விட்டு, அக்குழந்தைகளுக்கு திண்பண்டங்களையும், விளையாட்டு பொருட்களையும் வாங்கித்தந்து பத்திரமாகக் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வருகிறாள். அக்குழந்தைகளும் அன்னையின் அரவணைப்பே போதும் என எதுவும் உண்ணாமல் அயர்ந்து உறங்குகின்றன. அவ்வாறு வளர்த்து ஆளாக்கப்பட்ட குழந்தைகள், அன்னையின் வயோதிகத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய வைத்தியம் செய்யாமல், முதியோர் இல்லத்தில். செவிலியரின் பொறுப்பில் தனியாக தவிக்க விடுகின்றனர். இயன்ற அளவிற்கு ஈன்ற அன்னையை இரக்கத்துடன் அரவணைப்பதே அன்னையர் தின வேண்டுகோள்.

இன்றைய தாய்குலத்திற்கு சிறப்பு சேர்க்கும் இன்நன்னாளில், செய்ய வேண்டியது என்னவென்று சற்று சிந்தித்து பார்ப்பீர்.தாங்கள் பெற்ற குழந்தைகளை பேணி வளர்த்து சிறப்பு செய்கின்றனர். கணவனுக்காகவும், தம் சார்ந்த குடும்பத்தின் மற்ற அங்கத்தினருக்கும் தங்களின் குறைநிறைகளையும் மறந்து, உடல்நலம், தன்னலம் கருதாமல் வாழ்நாள் முழுதும் சேவை செய்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது உடல்சோர்வு, நலமில்லை என்றாலும் கூட, யாரிடமும் வெளிப்படுத்துவது இல்லை.

தாய்க்கு நாம் தான் அவர்களை கூர்ந்து கவனித்து, உடல்நலம் காக்க வேண்டும். பாலூட்டி சீராட்டி வளர்த்த பிள்ளைகள், வயது முதிர்ந்தபின் நம்மை சீராட்டும் என்று எதிர்பார்த்து எந்த தாயும், தன் குழந்தைகளை பேணுவதில்லை. இருப்பினும் தாய்க்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய பணிகளை சிறப்பாக செய்தால், அதற்கு மிஞ்சிய நற்செயல் உலகில் எதுவும் கிடையாது.வயது முதிர்ந்த அம்மாவை, நாம் அந்தந்த வயதிற்கு ஏற்ப சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், பிறநோய்கள் தாக்காமல் அவ்வப்போது பரிசோதனை செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை பொது மருத்துவ கண்காணிப்பு அவசியம்.

அன்னை - அம்மா கவிதை

அம்மாவின் அன்பும், அரவணைப்பும் குழந்தைக்கு ஆரம்பத்தில் இருந்து தேவைப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் தாயிடம் இருந்து பெறும் தாய்ப்பால் வேறு எவராலும் தரமுடியாத ஒன்று. உலகில் அனைத்து பொருட்களுக்கும் ஒரு விலை உண்டு. தாய்ப்பாலுக்கு மட்டும் விலைகூற முடியாது.அனைவருக்கும் நரகம் மட்டும் இருட்டாக இருக்கும் என நினைப்பதுண்டு. இருட்டிலும் ஒரு சொர்க்கம் என்றால், அது தாய் கருவறை மட்டும்தான்.எந்த ஒரு குழந்தையும் ஆரம்பத்தில் இருந்து தாயின் முகம் பார்த்துதான் வளர்கிறது. குழந்தை முதலில் சிரிப்பதும் அம்மாவின் முகம் பார்த்த பிறகுதான்.

குழந்தைக்கு தாய் எவ்வளவு அவசியமோ, அதேபோன்று தாய்க்கும் குழந்தை நலம் அவசியம். கர்ப்பம் தரித்தவுடன் சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது நலம். மருத்துவரின் ஆலோசனைப்படி நல்ல ஊட்ட சத்துள்ள மருந்துகளை உட்கொள்வது அவசியம். குறிப்பாக பெண்கள் கர்ப்பம் தரித்திருக்கும்போது, டாக்டரின் ஆலோசனையின்றி எந்த ஒரு மருந்தையும் உட்கொள்ளக் கூடாது. திருமணத்திற்கு முன்பே அம்மை போன்ற நோய்கள் வராதவாறு தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளுதல் அவசியம். குழந்தைகள் கடவுள் தந்தபரிசு. தாய் பரிசாக வந்த கடவுள். இவர்கள் இருவரையும் பாதுகாப்பது நம் கடமை.

Mothers Day Special Telugu Songs - Sakshi

தன்னை மெழுகுகாக்கி, பிறருக்காக வாழும் அன்னையர்களை சிறப்பிக்கும் விதமாக, “தினமலர்’ மற்றும் ஆரோக்கியா நிறுவனம் இணைந்து, “அன்னை ஓர் உயிர் ஓவியம்’ என்ற நிகழ்ச்சியை, சென்னையில் நடத்தின.முன்னாள் தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரன், விழாவில் பேசியதாவது:பெண்கள் எந்த வயதிலும் மனதை மூப்படைய விடக்கூடாது. எந்தவொரு குழந்தைக்கும், முதல் வழிகாட்டி அம்மா தான்.

இத்தகைய பெண்கள், சமூகத்தில் புதுமை பெண்களாய் பரிணமிப்பதில், ஆண்களின் பங்கே அதிகமுள்ளது. சினிமாக்களிலும், “டிவி’ நாடகங்களிலும் சித்தரிப்பதை போல, பெண்களே பெண்களுக்கு எதிரி என்ற நிலையை ஒழிக்க, பாடுபட வேண்டும், என்றார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts