பிந்திய செய்திகள்

இலங்கைக்கு இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த கிரிக்கெட் நிறுவனம்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள, சுகாதார துறைக்கு அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, சிறுவர் சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

அதேபோல், புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த நன்கொடைக்கு நேற்றைய தினம் கூடிய இலங்கை கிரிக்கட் செயற்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அதற்கான அவசரத் தேவையை கருத்தில் கொண்டு, நன்கொடையாக அளிக்கப்படும் நிதி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts