பிந்திய செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் 4வது வெற்றியை பெறுமா?

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 3 வெற்றி , 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 9 வது இடத்தில் உள்ளது.

சி.எஸ்.கே. அணி பெங்களூர் (23 ரன்), மும்பை (3 விக்கெட்), ஐதராபாத் (13 ரன்) ஆகியவற்றை தோற்கடித்தது. பஞ்சாப் அணியிடம் இரண்டு முறையும் (54 ரன், 11 ரன்), கொல்கத்தா (6 விக்கெட்), லக்னோ (6 விக்கெட்), ஐதராபாத் (8 விக்கெட்) குஜராத் (3 விக்கெட்), பெங்களூரு (13 ரன்) ஆகியவற்றிடம் தலா ஒரு தடவையும் தோற்று இருந்தது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 11 வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை இன்று சந்திக்கிறது. இந்தப் போட்டி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இப்போட்டியில் சென்னை அணி டெல்லியை வீழ்த்தி 4வது வெற்றியை பெறுமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். 7 ஆட்டத்தில் தோற்றதால் சி.எஸ்.கே.வின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு மங்கி விட்டது. கவுரமான இடத்தை பிடிக்க எஞ்சிய ஆட்டங்களில் வெற்றிபெறுவது அவசியமானதாகும்.

டோனி கேப்டன் பொறுப்புக்கு பிறகு சிஎஸ்கே 2 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. இதில் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. மற்றொன்றில் தோற்றது. பெங்களூருவுக்கு எதிரான கடந்த போட்டியில் வெற்றியை கோட்டை விட்டது.

ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5 வது இடத்தில் உள்ளது. அந்த அணி சி.எஸ்.கே.வை தோற்கடித்து 6 வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கேப்டன் ரிஷப் பண்ட், டேவிட் வார்னர் , ரோவ்மென் பவெல் , மிச்சேல் மார்ஷ் , ஷர்துல் தாகூர் , குல்தீப் யாதவ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

முன்னதாக இன்று மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத், டூபிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

ஐதராபாத் அணி 6வது வெற்றிக்காவும், பெங்களூரு அணி 7வது வெற்றிக்காவும் காத்திருக்கின்றன. இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் ஐதராபாத் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts