பிந்திய செய்திகள்

தனுஷ்கோடி அருகே தீடை பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இலங்கை முன்னாள் போலீஸ் அதிகாரி கைது!!

தனுஷ்கோடி தீடை பகுதியில் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை கடலோர காவல்படையினர் பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் முன்னுக்குப் பின்னான தகவல்களை அந்த நபர் தெரிவித்ததால் தீவிரமாக விசாரிக்கப்பட்டார்.

இதனையடுத்து அந்த நபர் இலங்கை திருகோணமலையை சேர்ந்த தினேஷ்காந்த் என தெரியவந்தது. இலங்கையில் 2012-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை போலீசாகவும் பணியாற்றியவர். பின்னர் விருப்ப ஓய்வு பெற்றதாகவும் கூறியுள்ளார்.

பொதுவாக இலங்கையில் இருந்து தஞ்சமடைய வரும் ஈழத் தமிழர்கள், கடல்வழியாக வருவது வழக்கம். ஆனால் தனுஷ்கோடியில் பிடிபட்ட தினேஷ்காந்த், விசா எடுத்துக் கொண்டு விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்திருக்கிறார்.

அதன் பின்னரே ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிக்கு தினேஷ் காந்த் வந்துள்ளார். ராமேஸ்வரம் அகதிகள் தடுப்பு முகாமுக்கு வரக் கூடியவராக இருந்தால் ஏன் விமானம் மூலம் சென்னை, மதுரைக்கு வர வேண்டும் என்று கடலோர காவல்படையினர் கேள்வி எழுப்பினர். ஆனால் தினேஷ்காந்திடம் இருந்து தெளிவான பதில்கள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது

மொத்தம் 5 மணிநேரம் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சந்தேக நபர் தினேஷ்காந்தின் விசா முடிவடைய 90 நாட்கள் இருக்கிறது; அதனால் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடக் கூடாது என எச்சரித்து கடலோர காவல்படையினர் அவரை விடுவித்திருக்கின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts