பிந்திய செய்திகள்

6 குழந்தைகளை கிணற்றுக்குள் வீசி எறிந்து கொலை செய்த தாய்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், மஹாத் தாலுகாவில் உள்ள காரவலி கிராமத்தில் கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது 6 குழந்தைகளை தாய் கிணற்றுக்குள் வீசி எறிந்து கொலை செய்த சம்பவம் பதறவைத்துள்ளது. இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

குறித்த கிராமத்தில் 30 வயதான பெண் ஒருவரே , அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளையும் அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார். அலறியபடி தண்ணீருக்குள் விழுந்த அவர்கள் மூழ்கிய நிலையில், இதுகுறித்து அறிந்தவர்கள் பதறியடித்து பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

உடனடியாக விரைந்து சென்ற பொலிசார் அந்த பகுதியினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த குழந்தைகளை மீட்ட போது 6 குழந்தைகளும் பரிதாபமான உயிரிழந்தமை தெரிய வந்துள்ளது.

18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 10 வயதுக்கு உட்பட்ட ஐந்து பெண் குழந்தைகளும் இவ்வாறு தாயால் இரக்கமற்று கிண்றில் வீசி எறியப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பெண்ணை கைது செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டதில் குடும்ப தகராறின்போது அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் வெறுப்படைந்த அவர், தான் பெற்ற தனது 6 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts