பிந்திய செய்திகள்

இந்தியாவுக்கு அமெரிக்க உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை!

அமெரிக்க உளவுத்துறை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை நவீனப்படுத்தும், அதிகரிக்கும் நடவடிக்கைகாளில் ஈடுப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆயுதப்படை தொடர்பான செனட் குழுக் கூட்டத்தில், இந்தியா – பாகிஸ்தான் உறவு குறித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா – பாகிஸ்தான் உறவு மோசமாகியிருக்கிறது.

இந்தியாவின் அணு ஆயுதங்கள், இராணுவ பலத்தை பார்க்கும் பாகிஸ்தான், தங்கள் நாட்டு அணு ஆயுதங்களை முக்கியமாக கருதுகிறது.

இதனால், இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் தனது இராணுவத்துக்கு பயிற்சியை வழங்கி வருகிறது எனவும், இது நிலைமையை மேலும் மோசமாக்கலாம் எனவும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி கூறியுள்ளார்.

Gallery

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts