பிந்திய செய்திகள்

அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ கேம் கண்ட்ரோலர்..!

ஜியோ நிறுவனம் முற்றிலும் புதிய ஜியோ கேம் கண்ட்ரோலரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது வயர்லெஸ் கேமிங் கண்ட்ரோலர் ஆகும். இதில் நீண்ட பேக்கப் வழங்கும் ரிசார்ஜ் செய்யக் கூடிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. கிளாசிக் தோற்றம் மற்றும் குறைந்த எடை கொண்டிருக்கிறது.

இதில் இரண்டு வைப்ரேஷன் மோட்டார்கள் மற்றும் இரண்டு பிரெஷர் பாயிண்ட் ட்ரிகர்கள் உள்ளன. இவை தலைசிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகின்றன. ப்ளூடூத் வசதி கொண்ட ஏராளமான ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் ஜியோ கேமிங் கண்ட்ரோலர் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வயர்லெஸ் கேமிங் கண்ட்ரோலர் 10 மீட்டர்கள் வரையிலான வயர்லெஸ் ரேன்ஜ் கொண்டுள்ளது.

இந்த கேமிங் கணட்ரோலர் ஆண்ட்ராய்டு டேப்லெட், ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களுடன் இணைந்து வேலை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், சிறப்பான கேமிங் அனுபவம் பெற இந்த கண்ட்ரோலரை ஜியோ செட் டாப் பாக்ஸ் கொண்டு பயன்படுத்த ஜியோ அறிவுறுத்துகிறது. ஜியோ செட் டாப் பாக்ஸ் 2019 ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ப்ளூடூத் 4.1 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஜியோ கேம் கண்ட்ரோலர் தற்போது ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இது மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. ஜியோ கேம் கண்ட்ரோலர் விலை ரூ. 3 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கேம் கண்ட்ரோலருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts