பிந்திய செய்திகள்

வெளியிட பட்ட AMOLED டிஸ்ப்ளே கொண்ட சியோமி பேண்ட் 7 விபரம்

சியோமி ரெட்மி நோட் 11T சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அடுத்த வாரம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும், மற்ற சாதனங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது.

சமீபத்திய அறிவிப்பின் படி சியோமி பேண்ட் 7 மாடல் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்போவதாக சியோமி தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் டீசர்களில், சியோமி பேண்ட் 7 மாடல் மே 24 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

டீசரின் படி புதிய அணியக்கூடிய சாதனம் அதன் முந்தைய மாடலை போன்றே காட்சி அளிக்கும் என தெரிகிறது. Mi பேண்ட் 7 மாடல் அதன் முந்தைய வெர்ஷன்களை போன்றே ஸ்டாண்டர்டு மற்றும் NFC என இரண்டு வெர்ஷன்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை சியோமி பேண்ட் 7 மாடலில் 1.62 இன்ச் AMOLED 192×490 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது.

இது முந்தைய சியோமி பேண்ட் 6 மாடலில் வழங்கப்பட்டு இருந்ததை விட 25 சதவீதம் பெரியது ஆகும்.

ஒருவரின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை டிராக் செய்ய இந்த பேண்ட் 7 மாடலில் ஏராளமான அம்சங்கள் மற்றும் பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்படலாம்.

இதில் SpO2, இதய துடிப்பு, ஸ்லீப் மாணிட்டரிங் மற்றும் பல்வேறு உடல் நலன் சார்ந்த விவரங்களை சேகரிக்கும் அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts