பிந்திய செய்திகள்

கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் விரைவில் விற்பனைக்கு

விரைவில் மாடல் அறிமுகமாகும் என கூறப்பட்டு வருகிறது. கூகுள் நிறுவனம் இதனை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கூகுளின் முதல் ஸ்மார்ட்வாட்ச் பிக்சல் வாட்ச் எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் உடன் மற்றொரு ஸ்மார்ட்வாட்ச் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த மாடல் கூகுள் பிக்சல் வாட்ச் ஃபிட் என்று அழைக்கப்பட இருக்கிறது.

கூகுள் பிக்சல் வாட்ச் ஃபிட் மாடல் பற்றிய தகவல்கள் கூகுள் ஊழியர்களிடம் இருந்து கிடைத்ததாக கூறப்படுகிறது. எனினும், இரு மாடல்களும் ஒரே மாதிரி இருக்குமா அல்லது வெவ்வேறாக காட்சியளிக்குமா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. பிக்சல் வாட்ச் பெயரை பயன்படுத்த கூகுள் நிறுவனம் ஏற்கனவே டிரேட்மார்க் பெற்று விட்டது.

இதனால் கூகுள் வெளியிடும் புது ஸ்மார்ட்வாட்ச் பிக்சல் வாட்ச் என்றே அழைக்கப்படலாம். கூகுள் பிக்சல் வாட்ச் பிட் மாடலை சுற்றி தடிமனான பெசல்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முற்றிலும் முரணாக பிக்சல் வாட்ச் ஸ்டாண்டர்டு மாடல் பெசல் லெஸ் டிசைன் கொண்டிருக்கும். மேலும் பில்டு-ஐ பொருத்தவரை ஸ்டாண்டர்டு மாடலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபினிஷ், பிட் மாடலில் அலுமினியம் பாடி டிசைன் வழங்கப்படுகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts