பிந்திய செய்திகள்

இந்தியாவில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட் டி.வி.

சியோமி நிறுவனம் NEXT நிகழ்வில் OLED விஷன் 55 ஸ்மார்ட் டி.வி.-யை அறிமுகம் செய்து இருக்கிறது. இது சியோமி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கும் முதல் 4K OLED டி.வி. மாடல் ஆகும். இதில் IMAX என்ஹான்ஸ்டு, டால்பி விஷன் IQ மற்றும் ரியாலிட்டி ஃபுளோ MEMC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டி.வி.யில் 30W எட்டு ஸ்பீக்கர் செட்டப் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி உள்ளது.

இத்துடன் 4.6mm மிக மெல்லிய ஃபிரேம், மெல்லிய பெசல் லெஸ் டிசைன் மற்றும் 97 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது. இந்த டி.வி.யில் ஃபார்-ஃபீல்டு மைக்குகள் உள்ளன. இவற்றை கொண்டு கூகுள் அசிஸ்டண்ட் சேவையை இயக்க முடியும்.

சியோமி OLED விஷன் டி.வி. 55 இன்ச் அம்சங்கள்:

  • 55 இன்ச் 3840×2160 பிக்சல் 4K OLED டிஸ்ப்ளே
  • குவாட் கோர் கார்டெக்ஸ் A73 மீடியாடெக் பிராசஸர்
  • மாலி-G52 MC1 GPU
  • 3GB ரேம்
  • 32GB மெமரி
  • ஆண்ட்ராய்டு டி.வி. 11 மற்றும் பேட்ச்வால்
  • ஃபார்-ஃபீல்டு மைக்
  • வைபை 6 802.11 ax (2.4GHz / 5GHz), ப்ளூடூத் 5
  • 3 x HDMI 2.1, eARC, 2 x USB, ஆப்டிக்கல், ஈத்தர்நெட், AUX போர்ட்
  • 30W (8 ஸ்பீக்கர் செட்டப்), டால்பி அட்மோஸ், DTS-X

புதிய சியோமி OLED விஷன் 55 டி.வி. விலை ரூ. 89 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 19 ஆம் தேதி துவங்குகிறது. இந்த டி.வி.யுடன் மூன்று ஆண்டுகளுக்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது. இதனை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போதும், மாத தவணை முறையை தேர்வு செய்யும் போதும் ரூ. 6 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts