Home தொழினுட்பம் புது 4K டி.வி.க்களை அறிமுகம் செய்த சோனி!

புது 4K டி.வி.க்களை அறிமுகம் செய்த சோனி!

0
புது 4K டி.வி.க்களை அறிமுகம் செய்த சோனி!

சோனி நிறுவனம் இந்தியாவில் தனது ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களை அப்டேட் செய்து, புதிய பிரேவியா X75K 4K டி.வி. மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.

புதிய டி.வி. மாடல்களில் 4K அல்ட்ரா HD LED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளன. புதிய ஆண்ட்ராய்டு டி.வி. X1 4K பிராசஸர், லைவ் கலர் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

இந்த டி.வி. 4K ரெசல்யூஷனில் மிகத் துல்லியமான கலர் மற்றும் காண்டிராஸ்ட்-ஐ வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள 4K பிராசஸரில் X1 X ரியாலிட்டி ப்ரோ தொழில்நுட்பம் உள்ளது.

இத்துடன் டால்பி ஆடியோ, கிளியர் பேஸ் தொழில்நுட்பம், பேஸ் ரிப்ளெக்ஸ் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதில் உள்ள லோ-எண்ட் சவுண்ட் அம்சம் திரைப்படங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் மியூசிக் உள்ளிட்டவைகளை பார்க்கும் போது அச்சதலான அனுபவத்தை வழங்குகிறது.

இந்த ஆண்ட்ராய்டு டி.வி. பயனர்களுக்கு பிடித்தமான தரவுகள், சேவைகள் மற்றும் சாதனங்களுக்கு அக்சஸ் வழங்குகிறது.

இத்துடன் இந்த டி.வி. ஆப்பிள் ஏர் பிளே 2 மற்றும் ஹோம்கிட் சப்போர்ட் கொண்டுள்ளது. சோனி ஸ்மார்ட் டி.வி.யை இயக்க அலெக்சாவை இணைத்து, டி.வி.யின் அம்சங்களை குரல் வழியே இயக்க முடியும்.

இத்துடன் பில்ட் இன் குரோம் காஸ்ட் வசதி உள்ளது. இதை கொண்டு வீடியோக்கள், கேம் மற்றும் செயலிகளை ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் இருந்து டி.வி.யில் இயக்க முடியும்.

இந்தியாவில் சோனி 43 இன்ச் KD-43X75K மாடல் விலை ரூ. 55 ஆயிரத்து 990 என துவங்குகிறது. இதன் 50 இன்ச் KD-50X75K மாடல் விலை ரூ. 66 ஆயிரத்து 990 என துவங்குகிறது. 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடல்களின் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

புதிய சோனி ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்கள் நாடு முழுக்க அனைத்து சோனி விற்பனை மையங்கள், முன்னணி விற்பனை மையகங்கள், ஆன்லைன் வலைதளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here