பிந்திய செய்திகள்

ஆபாசப் பயில்வான் ரங்கநாதன் கைதாவாரா?

நாளுக்கு நாள் பயில்வான் ரங்கநாதன் மீது புகார்கள் குவிந்தும், வலுத்தும் வரும் நிலையில், அவர் கைதாவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பத்திரிகையாளராகவும், குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் பயில்வான் ரங்கநாதன்.. இவர் இப்போதைக்கு எந்த பத்திரிகையிலும் வேலை பார்க்கவில்லை என்றே தெரிகிறது. அதேசமயம், பெரிதாக எந்த படத்திலும் நடித்தும் வரவில்லை.

அந்தரங்க விஷயங்களை பகிரங்கப்படுத்தி வருகிறார்.. இவர் சொல்லும் கிசு கிசு தகவல்களை பெறுவதற்காக, ஏகப்பட்ட யூடியூப் சேனல்கள் போட்டி போட்டுக் கொண்ட இவரை பேட்டி எடுத்து வருகின்றன.. அதற்காக ஒரு கணிசமான தொகையை கொடுக்கவும் தயாராக இருக்கின்றன..

“நீ யார் இன்னொருத்தர் படுக்கையறையை எட்டிப்பார்க்க? நீ யார் அவர்களின் அந்தரங்கங்களை பொதுவெளியில் பேசுவதற்கு?” தயாரிப்பாளர் கே.ராஜன் போன்றோர் எச்சரித்திருந்த நிலையில், நியாயமான பதில் இதுவரை அவருக்கு கிடைக்கவில்லை.. இதற்கெல்லாம் ஒரே காரணம், மக்களின் ரசனைகள் மலிந்து கிடப்பதுதான்.. பயில்வான் போடும் வீடியோக்களை பலரும் ரசித்து பார்க்கிறார்கள்.. மற்றொரு பக்கம் பயில்வானையும் திட்டுகிறார்கள்.

தமிழ் சினிமாவில் எம்ஜிஆரை தவிர யாரும் யோக்கியர் கிடையாது.. நான் யாரை பற்றியும் ஆபாசமாக பேசவில்லை. சட்டத்திற்கு உட்பட்டே பேசுகிறேன்” என்று பயில்வான் விளக்கம் தருகிறார்.. இன்று பாடகி சுசித்ரா கொந்தளித்துள்ளதுபோல், நடிகர், நடிகைகள் அன்றே கொந்தளிக்கவில்லை..

ஏற்கனவே இவர் மீது ராஜன் மற்றும் இயக்குநர் திருமலை ஆகியோர் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தாலும், தற்போது சுசித்ரா அளித்துள்ள புகார் காரணமாக பயில்வான் ரங்கநாதனுக்கு பிடி இறுகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..

பயில்வான் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.. “தனிமனித ஒழுக்கம்” என்பது எல்லா கால கட்டத்திலும், எல்லா நபர்களுக்கும் அவசியமானது.. அதை தவறும் பட்சத்தில், மக்களின் மதிப்பை நேரடியாகவே இழந்து விடுகிறார்கள்..

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts