பிந்திய செய்திகள்

படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய டான் படக்குழுவினர்

தமிழ் திரையுலகில்பிசியாக வலம்வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த மே 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் ரீதியில் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை டான் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts