2012-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ஒருகல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மதுமிதா. இதைத் தொடர்ந்து இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ராஜா ராணி, காஞ்சனா 2, ஸ்கெட்ச், விஸ்வாசம், டிக்கிலோனா என பல தமிழ் படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மதுமிதா, சில காரணங்களால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்

2019-ம் ஆண்டு மோசஸ் ஜோயல் என்பவரை மதுமிதா திருமணம் செய்துக் கொண்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுமிதாவின் வளைகாப்பு புகைப்படங்கள் வெளியாகி அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தின. இந்நிலையில், மோசஸ் – மதுமிதா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.