பிந்திய செய்திகள்

சாம்சங் – ஸ்மார்ட்போன் உற்பத்தியை குறைக்கின்றது..?

சாம்சங் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஸ்மார்ட்போன் உற்பத்தியை 39 சதவீதம் வரை குறைக்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பட்ஜெட் ரக மாடல்கள் மற்றும் ஃபிளாக்‌ஷிப் மாடல்கள் பாதிக்கப்பட இருக்கின்றன.

சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பு குறைவு, மின்சாதனங்களுக்கான தட்டுப்பாடு மற்றும் ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் போன்ற காரணங்களால் சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்கள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளதாக கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த ஆண்டு மட்டும் 310 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கையை 280 மில்லியனாக குறைக்க சாம்சங் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முந்தைய ஆண்டை விட பத்து சதவீதம் குறைவு ஆகும்.

ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு உற்பத்தி 35 சதவீதம் சரிவடையும் என ஷின்ஹன் முதலீட்டு நிறுவன ஆய்வாளர் ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டாவது காலாண்டு உற்பத்தியில் பத்து சதவீதம் வரை சரிவு ஏற்படலாம் என அவர் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts