பிந்திய செய்திகள்

ஸ்மார்ட்போன்கள் விலையை குறைத்த விவோ

விவோ நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y33s மற்றும் விவோ Y33T என இரண்டு Y சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைத்து இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களில் விவோ Y33s மாடல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. விவோ Y33T ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த வகையில், இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையும் இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது. விவோ Y33T ஸ்மார்ட்போனின் விலை ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு தற்போது ரூ. 17 ஆயிரத்து 990 என மாறி உள்ளது. விவோ Y33s மாடல் விலையும் ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பின் படி இந்த ஸ்மாரட்போன் விலை ரூ. 17 ஆயிரத்து 990 என மாறி இருக்கிறது.

விவோ Y33s மற்றும் விவோ Y33T ஸ்மார்ட்போன்களின் புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது. இவை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் ஏற்கனவே பிரதிபலிக்கின்றன. இதுதவிர விவோ இந்தியா இ ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இரு மாடல்களும் புதிய விலையில் கிடைக்கும்.

விவோ Y33s அம்சங்கள்:

 • 6.58 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
 • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G80 பிராசஸர்
 • 950MHz ARM மாலி-G52 2EEMC2 GPU
 • 8GB LPDDR4x ரேம்
 • 128GB (eMMC 5.1) மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • டூயல் சிம் ஸ்லாட்
 • ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 11.1
 • 50MP பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், f/1.8
 • 2MP டெப்த் சென்சார்
 • 2MP மேக்ரோ சென்சார், f/2.4
 • 16MP செல்ஃபி கேமரா, f/2.0
 • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
 • 3.5mm ஆடியோ ஜாக்
 • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
 • யு.எஸ்.பி. டைப் சி
 • 5000mAh பேட்டரி
 • 18W ஃபாஸ்ட் சார்ஜிங்

விவோ Y33T அம்சங்கள்:

 • 6.58 இன்ச் 2408×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
 • ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
 • அட்ரினோ 610 GPU
 • 8GB LPDDR4x ரேம்
 • 128GB (eMMC 5.1) மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • டூயல் சிம் ஸ்லாட்
 • ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 11.1
 • 50MP பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், f/1.8
 • 2MP டெப்த் சென்சார்
 • 2MP மேக்ரோ சென்சார், f/2.4
 • 16MP செல்ஃபி கேமரா, f/1.8
 • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
 • 3.5mm ஆடியோ ஜாக்
 • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
 • யு.எஸ்.பி. டைப் சி
 • 5000mAh பேட்டரி
 • 18W ஃபாஸ்ட் சார்ஜிங்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts