பிந்திய செய்திகள்

44MP செல்பி கேமராவுடன் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனத்தின் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ Y75 மாடலில் 6.44 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், யு நாட்ச் டிசைன், 44MP செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ G96 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், 4GB விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ Y75 ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.2, ஃபன்டச் ஓ.எஸ். 12 மற்றும் 4050mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

விவோ Y75 அம்சங்கள்:

 • 6.44 இன்ச் FHD+ 2400×1080 AMOLED ஸ்கிரீன்
 • ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G96 12nm பிராசஸர்
 • மாலி-G57 MC2 GPU
 • 8GB ரேம் (+4GB விர்ச்சுவல் ரேம்)
 • 128GB மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
 • ஃபன்டச் ஓ.எஸ். 12
 • 50MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
 • 8MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
 • 2MP மேக்ரோ கேமரா, f/2.4
 • 44MP AF செல்பி கேமரா, f/2.0
 • இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
 • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2, GPS, BEIDOU, GLONASS, GALILEO
 • யு.எஸ்.பி. டைப் சி
 • 4050mAh பேட்டரி
 • 44W ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய விவோ Y75 ஸ்மார்ட்போன் மூன்லைட் ஷேடோ மற்றும் டேன்சிங் வேவ்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts