பிந்திய செய்திகள்

புது டேப்லெட்டை அறிமுகம் செய்யும் சியோமி

சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் சியோமி பேட் 5 டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த டேப்லெட் மாடலின் வெளியீட்டு தேதியையும் சியோமி அறிவித்து விட்டது. முன்னதாக ஃபிளாக்‌ஷிப் சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என சியோமி அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், ஏப்ரல் 27 ஆம் தேதி நிகழ்விலேயே புதிய சியோமி பேட் 5 மாடலும் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. வெளியீட்டு தேதியை புது டீசர் மூலம் சியோமி அறிவித்து இருக்கிறது. தற்போதைய டீசரின் படி புதிய சியோமி பேட் 5 மாடலில் ஸ்டைலஸ், கீபோர்டு டாக் போன்ற அக்சஸரீக்களை இணைத்து பயன்படுத்துவதற்கான சப்போர்ட் வழங்கப்படும் என உறுதியாகி இருக்கிறது.

சியோமி பேட் 5

சியோமி பேட் 5 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

  • 11.2 இன்ச் 2560×1600 WQXGA 16:10 டிஸல்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், HDR 10
  • ஆக்டா கோர் கவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர்
  • அட்ரினோ 640 GPU
  • 6GB LPDDR4X ரேம்
  • 128GB / 256GB UFS 3.1 மெமரி
  • ஆண்ட்ராய்டு 11
  • 13MP பிரைமரி கேமரா
  • 8MP செல்ஃபி கேமரா
  • யு.எஸ்பி. டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ்
  • வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி
  • 8,720mAh பேட்டரி
  • 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

சீன சந்தையில் சியோமி நிறுவனம் சியோமி பேட் 5 மற்றும் சியோமி பேட் 5 ப்ரோ என இரு மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது. எனினும், சர்வதேச சந்தையில் சியோமி பேட் 5 மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையை போன்றே இந்தியாவிலும் சியோமி பேட் 5 மாடல் மட்டும் அறிமுகம் செய்யப்படலாம்.

இந்திய சந்தையில் புதிய சியோமி பேட் 5 அமேசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இத்துடன் Mi வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இதன் விற்பனை நடைபெறும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts