பிந்திய செய்திகள்

எலான் மஸ்க் – ஆப்பிள் ஊழியர்களை நக்கல்!

உலகம் முழுக்க கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தி இருந்தது. இன்றும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்கிறது.

இந்த நிலையில், ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகம் வர வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு பதிலாக மூன்று நாட்கள் ஊழியர்கள் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும் என ஆப்பிள் வலியுறுத்தி இருப்பதாக கூறப்பட்டது.

எனினும், கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து ஊழியர்கள் அலுவலகம் திரும்ப மேலும் சில காலம் ஆகும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

இந்த விவகாரம் குறித்த தனியார் செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பதிவுக்கு, எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். அதில், “உங்களின் உடற்பயிற்சி ஆடைகளை உடுத்திக் கொண்டு, டி.வி. பாருங்கள்,” என குறிப்பிட்டுள்ளார்.

உடற்பயிற்சி ஆடைகளை அணிந்து கொண்டு டி.வி. பார்ப்பதால் யாருக்கும் எந்த பயனும் இருக்க முடியாது. இதையே எலான் மஸ்க் கூறி இருக்கிறார்.

ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்களை அலுவலகம் வந்து பணியாற்ற கட்டாயப்படுத்தவில்லை. எனினும், வீட்டில் இருந்து பணியாற்றும் திட்டம் குறித்து ட்விட்டர் ஊழியர்கள் வருத்தம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எலான் மஸ்க்ஒரு வேளை முந்தைய திட்டப்படி ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கும் பட்சத்தில், இந்த விவகாரம் குறித்து எலான் மஸ்க் வேறு முடிவுகளை எடுக்கலாம்.

முன்னதாக பல சமயங்களில் சீன மக்களின் பணி கலாச்சாரம் குறித்து எலான் மஸ்க் புகழ்ந்து இருக்கிறார். மேலும் அமெரிக்கர்கள் வேலை செய்வதை தவிர்க்கவே விரும்புவர் என்றும் தெரிவித்து இருக்கிறார். ட்விட்டர் வலைதளத்தில் உள்ள போலி அக்கவுண்ட் மற்றும் பாட்களின் எண்ணிக்கை, அதன் மதிப்பை மாற்றலாம் என்பதால் ட்விட்டரை வாங்கும் முடிவை எலான் மஸ்க் ஒத்தி வைத்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts