பிந்திய செய்திகள்

பயன்படுத்தும் முன் பிறந்த தேதியை கொடுங்க-அதிரடி காட்டும் இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தும் முன் பிறந்த தேதி விவரங்களை பதிவிடக் கோரி இன்ஸ்டாகிராம் தனது பயனர்களை வலியுறுத்தி வருகிறது. முன்னதாக வயது உறுதிப்படுத்துவதை கட்டாயமாக்கப்போவதாக இன்ஸ்டாகிராம் அறிவித்து இருந்தது. அந்த வகையில் அறிவிப்பு வெளியான எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது இதனை செயல்படுத்த துவங்கி உள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் 13 வயதுக்கும் குறைவானவர்கள் செயலியை பயன்படுத்த விடாமல் செய்ய இன்ஸ்டாகிராம் முடிவு செய்துள்ளது. பிறந்த தேதி விவரங்களை கொண்டு ஒவ்வொரு வயதினருக்கு ஏற்ற விளம்பரங்களை வழங்கவும் இன்ஸ்டாகிராம் திட்டமிட்டிருக்கலாம்.

புதிய திட்டத்தை செயல்படுத்த இன்ஸ்டாகிராம் தரவுகளை பார்க்க முயற்சிக்கும் போது இடையில் பிறந்த தேதி விவரங்களை பதிவிட வலியுறுத்திகிறது. மேலும் இந்த ஆப்ஷனை நிராகரித்து விட்டு செயலியை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படவில்லை.

“இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு முன்பாக, இந்த அக்கவுண்ட் ஏதேனும் வியாபாரம் அல்லது பெட் சார்ந்து இருந்தாலும் பிறந்த தேதியை வழங்க வேண்டும்,” என்பதை திரிவிக்கும் திரை இன்ஸ்டாகிராமில் குறுக்கிடுகிறது. “இதன் மூலம் இளம் சமுதாயத்தினரை பாதுகாக்க முடியும். மேலும் உங்களின் பிறந்த தேதியை வைத்துக் கொண்டு விளம்பரங்கள் உள்பட, உங்களின் அனுபவத்தை மேம்படுத்துவோம். இது உங்களின் பொது ப்ரோபைலின் அங்கமாக இருக்காது,” என இன்ஸ்டாகிராம் தெரிவித்து இருக்கிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts