பிந்திய செய்திகள்

புது அம்சத்தை வெளியிட்ட டுவிட்டர்…

பிரபல செயலிலியான டுவிட்டரில் சர்கில்ஸ் என்ற பெயரில் புது அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இன்ஸ்டாகிராம் செயலியில் குளோஸ் ஃபிரெண்ட்ஸ் ஷாட்லிஸ்ட் அம்சத்தை போன்றே டுவிட்டர் தளத்தில் வழங்கப்பட்டுள்ள அம்சம் ஆகும். சர்கில்ஸ்-இல் சேர்க்கப்பட்டவர்களால் மட்டுமே உங்களின் டுவிட்களை பார்க்கவோ, ரிப்ளை செய்யவோ முடியும். இது மட்டுமின்றி டுவிட்டர் தளத்தில் எடிட் பட்டன் வசதியும் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.

புது அம்சம் மட்டுமின்றி ரிவைஸ் செய்யப்பட்ட ஹெல்ப் செண்டர் பக்கத்தில் டுவிட்டர் சர்கில் அம்சம் பற்றி விரிவாக விளக்கி இருக்கிறது. இது டுவிட்டர் கம்யூணிடிஸ் அல்லது ப்ரோடெக்டட் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்துவதை விட வித்தியாசமானது ஆகும்.

தற்போதைக்கு பயனர்களால் ஒரு சர்கிலை மட்டுமே உருவாக்க முடியும். ஒரு சர்கிலில் அதிகபட்சமாக 150 பேரை இணைத்துக் கொள்ள முடியும். சர்கிலில் சேர்க்கப்பட்டவர்களின் விவரங்களை சர்கிலை உருவாக்கியவரால் மட்டுமே பார்க்க முடியும். சர்கிலினுள் பதிவிடப்படும் டுவிட்களை ரிடுவிட் செய்ய முடியாது. சர்கில் அம்சம் டுவிட்களை யார் பிடிக்க வேண்டும் என்பதை கட்டுப்படுத்தி விடும். எனினும், தகவல்களில் உள்ள மீடியா அல்லது ஸ்கிரீன்ஷாட்களை பயனர்கள் ரி-ஷேர் செய்ய முடியும்.

ஒருமுறை சர்கிலில் சேர்க்கப்பட்டு விட்டால், அதில் இருந்து வெளியேற முடியாது. கலந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் கன்வெர்சேஷனை மியூட் செய்யலாம் என டுவிட்டர் தெரிவித்து உள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts