பிந்திய செய்திகள்

12 மணி நேரம் உயிரோட இருக்கலாம்..வெளியான நயன்தாராவின் ஓ-2 பட டீசர்

காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை தொடர்ந்து, ஜி.கே.விக்னேஷ் என்பவர் இயக்கி இருக்கும் நயன்தாரா நடித்து முடித்திருக்கும் அடுத்த படம் ‘ஓ-2’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட இருக்கிறார்கள். டிரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சினைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை பேருந்தில் சக பயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள்.

என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான் “ஓ-2”. தமிழ்நாடு, கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.” இந்த படத்தில் அம்மா பார்வதியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.+

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts