பிந்திய செய்திகள்

மீண்டும் இணையும் விஜய் – லோகேஷ் கனகராஜ்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் மாஸ்டர். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், நாசர், சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இதன் படப்பிப்பு சமீபத்தில் தொடங்கி ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

சமீபத்தில் தளபதி 67 படத்தில் விஜய் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியானது. இதனை தற்போது லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட லோகேஷ் கனகராஜ், விஜய்யுடன் அடுத்த படம் பண்ணுவதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் தற்போது கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விக்ரம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப்படம் ஜூன் மாதம் 3ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts