பிந்திய செய்திகள்

படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய தளபதி…

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் நடித்து வரும் புதிய படத்தில் நடிக்கின்றார்.இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

விஜய்க்கு நீண்ட நாட்கள் கழித்து குடும்பக் கதையாக இப்படம் அமைந்திருக்கிறது. இதனால் குடும்பத்தினரோடு தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் வகையில் எடுத்து வருகிறார்கள்.

நேற்று இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் விஜய் ஐதராபாத்திலிருந்து சென்னை வந்தார். சிறிது ஓய்விற்கு பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று “தளபதி 66” படத்தில் கலந்து கொண்டதாக பிரகாஷ்ராஜ் விஜய்யுடன் தான் செல்பி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். பிரகாஷ்ராஜ்க்கு இந்தப் படத்தில் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts