ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோதுமை மா ஏற்றுமதியை நிறுத்த இந்தியா தீர்மானித்துள்ளதன் காரணமாக உலக சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது கடுமையாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையிலேயே இலங்கையில் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.













































