Home விளையாட்டு 16 அணிகள் பங்கேற்கும் மகளிர் கைப்பந்து போட்டி இன்று ஆரம்பம்

16 அணிகள் பங்கேற்கும் மகளிர் கைப்பந்து போட்டி இன்று ஆரம்பம்

0
16 அணிகள் பங்கேற்கும் மகளிர் கைப்பந்து போட்டி இன்று ஆரம்பம்

எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி, ஜி.கே.எம். கைப்பந்து பவுண்டேசன் மற்றும் லேடி சிவசாமி அய்யர் பள்ளி ஆகியவை இணைந்து மாநில அளவிலான மகளிர் அழைப்பு கைப்பந்து போட்டியை சென்னையில் நடத்துகிறது.

பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் ஆகிய 2 பிரிவில் நடைபெறும் இந்தப் போட்டி மைலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி பள்ளியில் இன்று (14) தொடங்குகிறது. வருகிற 16-ந் தேதி வரை 3 நாட்கள் போட்டி நடக்கிறது.

பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., பி.கே.ஆர்., எஸ்.டி.ஏ.டி, ஐ.சி.எப், தமிழ்நாடு போலீஸ், டாக்டர் சிவந்தி கிளப், ஜி.கே.எம். பவுண்டே‌ஷன், பாரதியார் ஆகிய 8 அணிகளும், பள்ளிகள் பிரிவில் லேடி சிவசாமி, வேலம்மாள், டி.ஏ.வி, ஆவடி அரசு பள்ளி உள்ளிட்ட 8 அணிகளும் பங்கேற்கின்றன. லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது.

பெண்கள் பிரிவில் முதல் 4 இடங்களுக்கு முறையே ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், பள்ளி பிரிவில் ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இதேபோல் போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

வெளியூரில் இருந்து பங்கேற்கும் அணிகளுக்கு தங்குவதற்கு இடம் இலவசமாக அளிக்கப்படும்.

மேற்கண்ட தகவலை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், ஜி.கே.எம். கைப்பந்து பவுண்டே‌ஷன் தலைவர் வீரமணி ஆகியோர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here